Sunday, October 28, 2012

திரை மறைவு


நல்லவன் போல் நடித்து நயவஞ்சகமாய்
நாக்கில் தேன் தடவியது போல் விஷம் அதை
சிரிக்க சிரிக்கப் பேசி முதுகில் குத்தியே
வாழ்வில் பெருங் குழி பறித்திடுவர்

திரைமறைவுக்குள் நூறு முகங்கள் காட்டி அந்த
முகமூடிக்குள் முகம் தனை மூடி மறைத்து
மாய வாழ்க்கை வாழ்ந்திடும் வாழ்வினை விட்டு விட்டு
நிஜமான வாழ்வை அகமுகம் கொண்டு நோக்கிடுவாயா

திரைமறைவில் நின்றுகொண்டு நிதம் நிந்தனைகள்
வரையறை இன்றி தந்திடும் மானிடனே...!
நேருக்கு நேர் முகத்துக்கு முகம் நின்று
பாருக்குள்ளே நல்ல மனிதனாய் பரிணமித்திடுவாயா

01.06.2006

No comments:

Post a Comment