வான்வெளியில் பாய்ந்து வந்த இரும்புப்பறவைகளால்
கண் மூடித்திறக்கும் நிமிடத்துளிகளுக்குள்
எம் தேசத்து பள்ளி சிறார்களின்
உதிரமெல்லாம் உறைந்து போனதே
வானம் பார்த்து விழிமூடிக் கிடக்கும்
செஞ்சோலையில் எங்கள் பிஞ்சுகளின்
செங்குருதி குடித்த இரும்புப் பறவைகளே
முல்லையின் மரண ஓலம் உங்களுக்கு கேட்கிறதா.. ?
பாயிலே படுக்க வைத்து பெற்றோரும்
மற்றோரும் கதறியழ பார்த்த கண்களும் கலங்கி
கனத்த நெஞ்சுடைக்கும் கதறி அழும் ஓலத்தில்
மனங்களும் விழிசிந்தி வலிகளை வலிமையாக்கி
வலிகளை செலவு செய்ய முன் வருவோமா... ?
செங்குருதி குடித்த இரும்புப் பறவைகளே
முல்லையின் மரண ஓலம் உங்களுக்கு கேட்கிறதா.. ?
30.10.2006
No comments:
Post a Comment