Sunday, October 28, 2012

தமிழை மறக்கும் தமிழர்

காலங்கள் என்பதும் கவிதைகள் என்பதும் எங்கள்
காலம் கடந்த கனவுகளோ என்று ஒரு மயக்கம் உண்டு
காலதேவனின் கனவுகள் எப்போதுமே தாய் தாய்மொழி
காலம் கடந்தும் காப்பாற்றும் கண்மனியின் காதலையும்
காத்துகிடக்கும் தாய்மொழியயயும் அதன் புனிதத்தையும்

கரை கடந்துவிட்ட தமிழரில் தான் எத்தனை விதங்கள்
கரையில் கனவுகளுடன் எத்தனை விழிகள் கனவான
கரையை தேடும் ஓடங்கள் போல் தமிழால் இணைந்த
கரை தொட்ட உள்ளங்கள்  எப்போதுமே டமிழ் பேச
கரை இல்லாத கடல்கடந்து தம்மை விற்ற டமிழர்

வேற்று நாகரிகமும் வெற்று நடைகளும் தாய் மொழியை
வேற்று உறவாக வரித்து தன் அடையாளம் இழந்து
வேற்று மோகத்தில் தன்னிலை மறந்து தன்னை தொலைத்து
வேற்று மொழி பேசி தாயை மறந்த உறவே நீ தமிழையும்
வேற்று இனமாக விலகுவது பெற்றதாயை விற்பது போல்

தாய் நாடு கடந்தும் கலாச்சாரம் விலகியும் போகின்ற
தாய் மறந்த என் உடன்பிறப்பே உன் புலம் பெயர்ந்த
தாய் நாடும் உன்னை மறக்கும் அப்போது அகதியாய்
தாய் நாட்டில் அடைக்கலம் தேடும் நாள் ஒன்று வரும்
தாய் முகம் மறந்த உனக்கும் தாயாய் அடைக்கலம் தரும்

உன் மொழியை நீ மறைத்தாலும் உன் சுற்றங்களை
உன் மனது மறந்தாலும் உன் அறிவில் கனவில்
உன் பாசங்கள் வருவது போல் எங்கே பிறந்தாயோ
உன் வேர்கள் அங்கே தான் இருக்கும் நீ ஒரு நாற்று
உன் நிறம் மாறாது உன்னால் இவர்களுடன் கலக்க முடியாது

எப்போதும் காசு வரும் காதல் வரும்  கனவும் வரும்
எப்போதும் இறப்பும் வரும் விபத்தும் வரும்
எப்போதும் பிரிவும் வரும் உறவும் வரும் காணாதபோது
எப்போதும் காலனும் வருவான் அவனை சந்திக்க
எப்போதும் தயாராய் இரு உன் அடையாளங்களோடு

தமிழ் என்பது காலங்கள் கடந்தஓரு வேதம்
தமிழ் எப்போதும் இனிமையும் அதன் சுவையும்
தமிழ் போல் இல்லை தாயின் அன்பு போல்
தமிழ் மழலையின் சிரிப்பு போல் தண்மதி போல்
ருக வகைகளிலும் அடங்காத ஒர் அன்னிய இனம்
மிருகங்கள் தன்னினம் விட்டு பிரிவதில்லை தன் கூட்டம்
மிருகம் விலகுவதில்லை மதம் பிடிக்கும் வரை  புரிவாய்தமிழ் அணைப்பில் வாழ்ந்து பார் தமிழ் மறந்தவனே

பிரிவுகள் எல்லாம் வருவது தான் வாழ்க்கை அது போல்
பிரிவுகள் என்று இருப்பதும் சேரும் இனிமையை
பிரியாமல் மனதில் வைக்கும் ஒரு அழகிய உணர்வு
பிரிந்தாலும் உறவுக்கு நன்று என்றால் அதும் சொல்லாமல்
பிரிவதும் நன்று ஆனால் தமிழை பிரிவதும் மறப்பதும்

மிருகம் போல் இருப்பவன் மனிதனே இல்லை என்று சொல்ல
மிருகமே அனுமதிக்காதபோது தன் அடையாளம் தொலைத்தவன்
மிருக வகைகளிலும் அடங்காத ஒர் அன்னிய இனம்
மிருகங்கள் தன்னினம் விட்டு பிரிவதில்லை தன் கூட்டம்
மிருகம் விலகுவதில்லை மதம் பிடிக்கும் வரை  புரிவாய்

No comments:

Post a Comment