தாம் ஈன்ற மண்ணுக்காக
தம் உயிரை துச்சமென்று நினைந்து
துளிர்த்த ஆசைக்கனவுகள் அனைத்தையும்
துறந்து துணிவினை நெஞ்சிலே நிறுத்தி
தமிழீழத்துக்காக வீர வேங்கையாகி
மரணித்த மா வீரர்களே
களமிரங்கிப் போராடி
குருத்தினில் குழி சென்று
கல்லறையில் துயில் கொள்ளும்
காவிய நாயகர்கள் நீங்களே
வாழ்விலும் சாகாவரம் பெற்ற
சரித்திர நாயகர்கள் நீங்கள்
கார் முகில் சூழ வருகின்ற
குளிர்காற்று வீசுகின்ற பொழுதுகளில்
சிட்டிகளில் நெய் விளக்கேற்றி
சிறு விழிகள் நீர் கோர்த்து
தேசம் எங்கும் தீபம் ஏற்றிடுவோம்
பிறப்பின் சிறப்பாய்
இறப்பிலும் உயிர்ப்பாய் எம்
நெஞ்சமில் வாழ்ந்திடுவீர்
மாவீரக் கண் மணிகளே
தம் உயிரை துச்சமென்று நினைந்து
துளிர்த்த ஆசைக்கனவுகள் அனைத்தையும்
துறந்து துணிவினை நெஞ்சிலே நிறுத்தி
தமிழீழத்துக்காக வீர வேங்கையாகி
மரணித்த மா வீரர்களே
களமிரங்கிப் போராடி
குருத்தினில் குழி சென்று
கல்லறையில் துயில் கொள்ளும்
காவிய நாயகர்கள் நீங்களே
வாழ்விலும் சாகாவரம் பெற்ற
சரித்திர நாயகர்கள் நீங்கள்
கார் முகில் சூழ வருகின்ற
குளிர்காற்று வீசுகின்ற பொழுதுகளில்
சிட்டிகளில் நெய் விளக்கேற்றி
சிறு விழிகள் நீர் கோர்த்து
தேசம் எங்கும் தீபம் ஏற்றிடுவோம்
பிறப்பின் சிறப்பாய்
இறப்பிலும் உயிர்ப்பாய் எம்
நெஞ்சமில் வாழ்ந்திடுவீர்
மாவீரக் கண் மணிகளே
No comments:
Post a Comment