Thursday, October 25, 2012

காலம் கரைகிறேதே


உள்ளங்கைத் தண்ணீராய் காலம்
கை நழுவி நழுவி ஓடுகிறது
வெட்ட வெட்ட வளரும் நகமும் இல்லை
கூந்தலும் இல்லை இது வாழ்க்கை
 
காலத்தின் ஒட்டத்தில் கைகோர்த்து
கனவுகளை சுமந்து கொண்டு வாழ்ந்து
களைத்து காலமாகிவிடுதல் வாழ்வில்
ஒர் அத்தியாயமாய் காலம் கரைகிறது
 
முழுநிலா தேய்ந்து தேய்ந்து பின்னே
வளர்பிறையாய் வளர்வது போலே
எம் வாழ்க்கை இப் புவியில் இல்லை
நிகழ்காலம் அதில் நிமிடத்துளிகள்
அனைத்தையும் உணர்ந்தே ரசனையுடன்
அனுபவித்தே வாழ்ந்திடுவோம்
 
காலம் வந்தால் இலைகள் மரத்தில் தங்காது
காலம் வந்தால் உயிர் உடலில் தங்காது

No comments:

Post a Comment