அகதி வாழ்வின் அரசியல் தஞ்சம்
தாய்மொழி வழிக் கல்வி தமிழ்
புலம்பெயர் வாழ்வின் நடப்பில்
அடுத்த தலைமுறை நோக்கிய
பயணத்தில் தமிழ் இனி
மெல்லத்தான் சாகுமா...?
தமிழ் கற்பிக்க தமிழாலயங்கள்
தொலைக்காட்சிகள் வானொலிகள் பல
இவற்றோடு தமிழ் பத்திரிகைகள்
மாதாந்த இதழ்கள் உடன்
இணையத்தில் பல தமிழ்
இணையப்பக்கங்கள் இத்தனைக்கும்
மத்தியில் தமிழ் மெல்லத்தான் சாகுமா..?
தமிழின் நிலைதான் என்ன
தமிழ் அழிந்து விடுமா என்ன
தமிழ் வளர்த்தெடுக்கும் நிலையில்
வெல்லத் தமிழினி மெல்ல வாழும்
மெல்லத் தமிழினி வெல்ல எம்
செல்லத் தமிழர் இனி இனிதே முனைந்து
செயற்பட்டு அடுத்த தலைமுறைநோக்கிய
பயணத்தில் கைகொடுத்து முயன்றிடுவோம்
No comments:
Post a Comment