Sunday, October 28, 2012

இடை இடையே


வடையோடு சாதம் பச்சடி கூட்டு தயிர் என்றும்
சீடை தொடங்கி கடலை முறுக்கு வரை
தடை ஏதுமில்லாமல் வயிறார உண்டதன் விளைவு
எடைகூடி எக்கச்சக்கமாய் உருவமும்
இடையில்லாமல் உருமாறிப்போன வேளைதன்னில்
கோடை வெய்யிலின் அனல் அகோரமாய் தாக்க
ஓடை தேடி ஓட்டமாய் ஓடினேன்

மடை திறந்த வெள்ளமாய் பாயும் ஆற்றுநீரும்
வாடைக்காற்றின் இதமான கட்டித் தழுவலும் ஆஹா
அடைந்தேன் இன்பம் அனைத்தும் கடவுள் தந்த
கொடை என்றே சுகம் அனுபவித்த வேளையில்
கூடையிலே பூச்சரமோ என்று எண்ணுமளவுக்கு
சடையிலே மல்லிகைச்சரம் பின்னிப்பிணைய
உடையிலே ஊதாநிற சல்வார்கமிஸ் மின்ன
தாடை மீது  மச்சத்துடன் கொடி
இடை அவளின் மென்மை அழகும்
நடையிலே தங்கப் பதுமையுடன் கதைபேசும்
கடைக்கண் பார்வையாலே அன்புடன்
இடைக்கிடை என்னை நோக்கி முறுவலித்தாள்

இடையிடையே இருவிழி நோக்கி பார்த்ததால் நானும்
பாடையில போகும் முன் முனைப்போடு
எடை குறைக்க உடைப்பயிற்சி நிலையம் சென்று
வல்லினத்தில் இனிக்கும் மெல்லினமாய்
மெல்லினத்தில் இணையும் வல்லினமாய் வாழுமிந்த
இடையினத்துப் பைங்கிளியை நினைந்து நினைந்து
இடையிடையே என் மனம் புலம்புது இங்கே


No comments:

Post a Comment