ஆசை உள்ளவனுக்கும் அன்பை நாடாதவனுக்கும்
ஆகமம் விரும்பாதவனுக்கும் இந்த அகிலத்தில்
ஆண்டவனை ஏற்காதவனுக்கும் புரியாதவனுக்கும்
ஆழமறியாமல் போனவனுக்கும் மண்ணின் மீது
இச்சை கொண்ட அரசனுக்கும் இரக்கமில்லா மனிதருக்கும்
இகமதில் காதல் கொண்டோருக்கும் வலியோருக்கும்
இறவா ஆசை கொண்டோருக்கும் பெண்ணின் மனம் புரியா
இயலாத ஆடவருக்கும் கனம் பண்ணா பிள்ளைகளுக்கும்
காதலின் மகத்துவம் புரியா காதலருக்கும்
காத்திருத்தலின் அருமை புரியா மனங்களின்
காவலின் அர்த்தம் புரியாதவர்களுக்கும்
காலம் சொல்லும் பாடங்கள் தான் இவை
ஆழம் அறியாமல் காலைவைத்து
ஆழம் அறியாமல் ஆடாதே
21.03.2006
No comments:
Post a Comment