அருகில் இருந்தவளை அழைத்து சென்ற
ஆழியே உன்பசிஅடங்காமல் அலைகிறாயா,
ஆர்ப்பரித்தெழும் உன் அலைகரங்களில்
ஆசைமனைவியை அழைத்து சென்றாயே
அன்புக்குழந்தைகளை கவர்ந்து விட்டாயே,
அத்தனை உயிரும் குடித்தும் உன்பசி அடங்கவில்லையா,
அமைதியாய் இருந்த என்குடும்ப வாழ்வை கவர்ந்த நீ
அன்புச்செல்வங்களை ஒருநாள் திரும்பகொடுப்பாய் என்று
அன்றாடம் காத்து இருக்கிறேன் இந்தகரையில்
அமைதியாய் பதிலேதும் சொல்லாமல் அலைகிறாய்
அலையும் என் ஆவியு உன்னிடம் வரும் ஒருநாள்
No comments:
Post a Comment