Wednesday, October 24, 2012

பாவம் தான் சேர்ந்திடுமா....

நாடு விட்டு நாடு வந்து நாடோடியாய் ஒயாமல்
பாடு பட்டு உழைத்த பணத்தினை
நாடியே வந்து ஆண்டவன் உண்டியலில் இட்டால்
தேடும் சுகம் தான் ஆனந்தமாய் கிடைத்திடுமா

அடுத்தவன் சொத்தை அழித்து விட்டு
அலைந்து பண்ணாத பாவமெல்லாம் பண்ணிவிட்டு
ஆக்கம் தரும் ஆண்டவனுக்கே லஞ்சமாய்
ஆபரணங்கள் காணிக்கையாய் தந்துவிட்டால் மனதில்
ஆத்ம சாந்தி தான் கிடைத்திடுமா

செய்த பாவங்கள் புனிதமாகி விடவும்
நினைத்த காரியங்கள் நிறைவேறிடவும்
நேர்த்திக்கடன் அன்னதானம்  என்ற
போர்வைக்குள் பெரும் பேறுதான் பெற்றிடுவாரோ

பாவம்தனை தீர்த்திட தந்திட்ட அன்னதானம்தனை
ஒயாமல் உழைத்து ஓடாகிப்போனோரும்
ஒயாமல் இறைவன் துதி வணங்கியோரும் உண்டால்
பாவம் தான் தீர்ந்திடுமோ அன்றில் மேலும்
பாவம் தான் சேர்ந்திடுமா....

No comments:

Post a Comment