கூழ்
ஒரு கை பிடி அரிசி
மரக்கறி - பயிற்றங்காய். கிழங்கு, போஞ்சி, பூசணி
மீன் - நண்டு, இறால், மீன், கணவாய்
புளி
உப்பு
மிளகு
உள்ளி
செத்தல் மிளகாய்
ஓடியல் மா
செய்முறை
செத்தல் மிளகாயை தண்ணீரில் ஊற வைக்கவும்.
ஓடியல் மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு, தண்ணீர் விட்டு ஊற வைக்கவும். மா கீழே அடைந்தவுடன் தெளிந்த நீரை வடித்து விடவும். இப்படி இரண்டு தடவைகள் செய்யவும்.
ஊறிய செத்தல் மிளகாய், மிளகு, உள்ளி இவற்றை கிரைண்டரில் அரைத்து எடுக்கவும். சிறிது நீர் விட்டு பசையாக அரைக்கவும்.
அரிசி, மரக்கறிகளை தேவையான தண்ணீர் விட்டு அவிக்கவும்.
சிறிது அவிந்த பிறகு மீன், நண்டு, இறால் போட்டவுடன் அரைத்து வைத்த மிளகாய் கலவையை போட்டு அவிய விட வேண்டும்.
அவிந்த உடன் கரைத்த புளி, உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
எல்லா பொருட்களும் ஒன்று சேர்ந்த பின்பு ஓடியல் மாவை விடவும்.
ஒரு தடவை கொதித்த உடன் அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.
ஓடியல் மா சேர்த்த பின்பு அதிக நேரம் கொதிக்கவிட்டால் கூழ் கட்டியாகி விடும்.
சுவைக்காக கிழங்கு, கத்தரிக்காய் பொறித்து தூவி சாப்பிடலாம்.
தேங்காய் சொட்டும் சேர்க்கலாம்.

No comments:
Post a Comment