Thursday, June 13, 2019

பச்சை மிளகாய் சம்பல்

தேவையான பொருட்கள்:-
2 மேசைக்கரண்டி தேங்காய்பூ
3 பச்சை மிளகாய்
1/4 தேசிக்காய்
உப்பு
தண்ணீர்



செய்முறை
மிளகாய், பச்சைமிளகாய், உப்பு, தேசிக்காய் சேர்த்து கிரைண்டரில் அடிக்கவும்.
அரைத்த பின்பு தேங்காய் பூ, சிறிது தண்ணீர் சேர்த்து பசையாக அரைக்கவும்.



அரைத்த பின்பு வெங்காயம் சேர்த்து இரண்டு சுத்து கிரைண்டரில் அடிக்கவும்.


அரைத்த சம்பலை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.

Thursday, June 6, 2019

முறுக்கு

தேவையான பொருட்கள்
1 கப் கடலை மா
2 கப் அவித்த மா
1 மேசைக்கரண்டி சின்னச் சீரகம்
1மேசைக்கரண்டி எள்ளு
1 மேசைக்கரண்டி செத்தல் தூள்
1 மேசைக்கரண்டி நெய்
1 தேக்கரண்டி உப்பு
3 கப் தண்ணீர்

பொறிக்க எண்ணெய்

 செய்முறை
எல்லாவற்றையும் கலந்து குழைத்து வைக்கவும்.
எண்ணெயை காய வைக்கவும்.
முறுக்கு உரலில் மாவை போட்டு பிழிந்து வைக்கவும்.
எண்ணெய் காயந்த உடன் முறுக்குகளை போட்டு பொறித்து எடுக்கவும்.

எள்ளு உருண்டை

தேவையான பொருட்கள்.
200 கிராம் எள்ளு
50  கிராம் fladseed
30 கிராம் சக்கரை

செய்முறை
மிதமான சூட்டில் எள்ளை  சூடு காட்டவும்.
ஆறியதும் எள்ளு, fladseed கிரைண்டர் ல் அரைத்து எடுக்கவும்.
சர்க்கரை யும் சேர்த்து அரைக்க வேண்டும்.

உருண்டைகளாக பிடித்து தட்டில் வைக்கவும்.

Wednesday, June 5, 2019

சாம்பார்

தேவையான பொருட்கள்
1/2 சுண்டு மைசுர் பருப்பு
300 கிராம் மரக்கறி - கரட், கிழங்கு, கத்தரி, பூசணி
1 தக்காளி
வெங்காயம்
பச்சை மிளகாய்
உள்ளி
செய்முறை
1/2 மேசைக்கரண்டி மிளகாய்த்தூள்
தாளிக்க - கடுகு,  பெருஞ்சீரகம், உழுந்து

செய்முறை
பருப்பை கழுவி ஒரு சட்டியில் போடவும்.
அத்தோடு காய்கறிகள், தக்காளி போட்டு அவிய விட வேண்டும்.
அவிந்த பின்பு இறக்கி வைக்க வேண்டும்.
வேறு ஒரு சட்டியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், உழுந்து போட்டு தாளிக்க வேண்டும்.
வெங்காயம், பச்சை மிளகாய், உள்ளி போட்டு தாளித்து அதை அப்படியெ சாம்பாரில் கொட்டி கிளற வேண்டும்-

சீனிச்சம்பல்

தேவையான பொருட்கள்
500 கிராம் வெங்காயம்
1 மேசைக்கரண்டி நொறுக்கிய மிளகாய்த்தூள்
15-20 கிராம்  மாசி (தண்ணீரில் ஊறவைக்கவும்)
1 துண்டு கறுவா -தூள்
3 ஏலகாய்  - தூள்
2 கராம்பு  - தூள்
உப்பு
35-40 மி.மி. எண்ணெய்
1 பின்ச் சீனி
செய்முறை
ஒரு சட்டியில்  25 மி.மி எண்ணெயை சூடாக்கி அதில் வெங்காயம், உப்பு சேர்த்து மிதமான சூட்டில் வதக்கவும்.
சிறிது நேரம் மூடி அவிய விடவும்.  ஆவியில் இருந்து வடியும் நீர் வெங்காயத்தில் வந்து சேரும்.
நீர் வற்றும் வரை அடிக்கடி வெங்காயத்தை கிளறவும்.
தண்ணீர் வற்றியதும் வெங்காயத்துக்குள் நொறுக்கிய செத்தல் மிளகாய் போட்டு கிளறவும்.
பின்பு மாசியை சேர்த்து கிளறவும்.
சீனியையும் சேர்த்து கிளறவும்.
எஞ்சி உள்ள எண்ணெய்யும்  சேர்த்து வதங்க விடவும்.
வெங்காயம் பொரிந்து  நிறம் மாறி வரும்.
அப்பொழுது அடுப்பில் இருந்து இறக்கி, ஏலக்காய், கறுவா, கராம்பு தூள் போட்டு கிளறவும்.
ஆறவிட்டு போத்தலில் போட்டு வைக்கலாம்.

Tuesday, June 4, 2019

பத்தியக்கறி

பத்தியக்கறி
4-6 துண்டு மீன்
2 மேசைக்கரண்டி மல்லி
1/2 மேசைக்கரண்டி சின்னசீரகம்
1/2 மேசைக்கரண்டி மிளகு
1 தேக்கரண்டி மஞ்சள்
4-5 உள்ளி
1 துண்டு இஞ்சி
புளி கொஞ்சம்
5-6 சின்ன வெங்காயம்
1 மேசைக்கரண்டி நல்லெண்ணெய் அல்லது ஒலிவ் ஒயில்
உப்பு
1/4 தேக்கரண்டி வெந்தயம்
1 மேசைக்கரண்டி தேங்காய் பூ
செய்முறை
சட்டியில் எண்ணெய் ஊற்றி  உள்ளி, இஞ்சி போடவும்.
தேங்காய் பூ போட்டு கிளறவும்.
மிளகு போடவும்.
அடுப்பை நிற்பாட்டி விடவும்.
சீரகம், மல்லி போட்டு கிளறவும்.
வெங்காயம் போடவும்.
மஞ்சள் தூள் போடவும்.
எல்லாவற்றையும் நீர் விட்டு பசையாக அரைக்கவும்.
ஒரு சட்டியில் மீன், வெந்தயம், அரைத்த கலவை, உப்பு, புளி கரைசல்,  அளவான நீர் விட்டு அவிய விட வேண்டும்.
சின்ன வெங்காயம் 4-5 சேர்த்தால் சுவையாக இருக்கும்.
அவிந்த உடன் இறக்கி வைக்கவும்.

கூழ்

கூழ்
ஒரு கை பிடி அரிசி
மரக்கறி - பயிற்றங்காய். கிழங்கு, போஞ்சி, பூசணி
மீன் - நண்டு, இறால், மீன், கணவாய்
புளி
உப்பு
மிளகு
உள்ளி
செத்தல் மிளகாய்
ஓடியல் மா

செய்முறை
செத்தல் மிளகாயை தண்ணீரில் ஊற வைக்கவும்.
ஓடியல் மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு, தண்ணீர் விட்டு ஊற வைக்கவும்.  மா கீழே அடைந்தவுடன் தெளிந்த நீரை வடித்து விடவும். இப்படி இரண்டு தடவைகள் செய்யவும்.
ஊறிய செத்தல் மிளகாய், மிளகு, உள்ளி இவற்றை கிரைண்டரில் அரைத்து எடுக்கவும். சிறிது நீர் விட்டு பசையாக அரைக்கவும்.
அரிசி, மரக்கறிகளை தேவையான தண்ணீர் விட்டு அவிக்கவும்.
சிறிது அவிந்த பிறகு மீன், நண்டு, இறால் போட்டவுடன் அரைத்து வைத்த மிளகாய் கலவையை போட்டு அவிய விட வேண்டும்.
அவிந்த உடன் கரைத்த புளி, உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
எல்லா பொருட்களும் ஒன்று சேர்ந்த பின்பு ஓடியல் மாவை விடவும்.
ஒரு தடவை கொதித்த உடன் அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.
ஓடியல் மா சேர்த்த பின்பு அதிக நேரம் கொதிக்கவிட்டால் கூழ் கட்டியாகி விடும்.
சுவைக்காக கிழங்கு, கத்தரிக்காய் பொறித்து தூவி சாப்பிடலாம்.
தேங்காய் சொட்டும் சேர்க்கலாம்.

உப்பு மா

உப்பு மா


1 கப் உப்புமா
1 1/2 கப் தண்ணீர்
2-3 மேசைக்கரண்டி எண்ணெய்
1 வெங்காயம் {சிறிதாக வெட்டியது}
2 பச்சை மிளகாய் {சிறிதாக வெட்டியது}
200 கிராம் கரட், கிழங்கு, போஞ்சி {வெட்டியது}
தாளிக்க - கடுகு, உழுந்து, பெருஞ்சீரகம்,கடலைபருப்பு
1 மேசைக்கரண்டி தேங்காய்பூ
செய்முறை
சட்டியில் எண்ணெய் விட்டு கடுகு, உழுந்து, பெருஞ்சீரகம்,கடலைபருப்பு போடவும்
வெங்காயம், மிளகாய் போடவும்.
மிதமான சூட்டில் வெட்டிய காய்கறிகளை போட்டு வதக்கவும்.
உப்பு போடவும்.
மரக்கறிகள் அரைவாசி அவிந்த உடன் ரவையை போட்டு, அகப்பை தடியால் கிளறி விடவும்
அடுப்பை நிற்பாட்டி விட்டு, சூடு தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக விட்டு கிளற வேண்டும்.
கிளறி முடிந்த உடன் உப்பு சரி பார்த்து, தேங்காய் பூ வையும் கிளறி மூடி வைக்கவும்.