உறவு பற்றிய தத்துவங்கள்;-
1. எந்த உறவையும் பிடித்து நிறுத்தாதே…! யாரும் நிரந்தரம் இல்லாத உலகில் எதற்காக உங்களை வருத்தி காயப்படுத்திக் கொள்கிறீர்கள்…!
2. தேடித் போய் பேசினால் அவமானம் கிடைக்கும் என்ற ஒரே காரணத்தால் தான் தொலைந்து விடுகிறோம் பல உறவுகளை. . .!
3. தேவையற்ற பேச்சே உறவுகளை தொலைப்பதற்கு காரணம். பேச்சை அடக்கினால் உறவு நிலைக்கும்.
4. எந்த உறவாக இருந்தாலும் அதில் உண்மையான பாசம் இருந்தால் மட்டுமே, நீ விலகி நின்றாலும் அது உன்னை விரும்பிவரும்.
5. என்னதான் உரிமையோடு நினைத்துப் பழகினாலும், சில நேரங்களில் நான் யாரோ நீ யாரோ என்று உணர வைத்து விடுகிறார்கள் சில உறவுகள்…!
6. சிரிக்க வைத்த உறவுகள் சில நிமிடங்களில் நினைவில் இருக்கும். ஆனால் அழ வைத்த உ றவுகள் சாகும் வரை நினைவில் இருக்கும். . . !
No comments:
Post a Comment