வாழ்க்கை பற்றிய தத்துவங்கள்
1. சரியோ தவறோ. . . உன் வாழ்க்கை என்னும் புத்தகத்தை எழுதும் எழுதுகோல் உன் கையில் இருக்க வேண்டும். மற்றொருவர் கையில் கொடுத்தால் கிறுக்கித் தள்ளி விடுவார்கள்…!
2. வாழ்க்கையில் எதுவுமே நிரந்தரம் இல்லை. . . என்பதை உணர்ந்தவன், துன்பத்தைக் கண்டு துவண்டு விடுவதும் இல்லை. இன்பத்தைக் கண்டு துள்ளிக் குதிப்பதும் இல்லை.
3. எப்படி பேச வேண்டும் என்று கற்றுத்தர நிறை பேர் இருக்கிறார்கள். ஏன் பேசாமல் இருக்க வேண்டும் என்று கற்றுக்தர வாழ்க்கை மட்டுமே இருக்கின்றது.
4.நினைவுகள் தான் உண்மையான உயிர். நம் வாழ்வில் இழந்தவர்களை மீண்டும் உயிருடன் வாழ வைப்ப்து நினைவுகள் மட்டுமே. . .! உறவுகள் விலகினாலும் நினைவுகள் பிரியாது. . .!
5. வாழ்க்கையில் அடிபட்ட பிறகுதான். . . சிலரது உண்மைதான முகத்தையும் தெரிய முடிகிறது.
6.குத்திக்காட்டும் மனிதர்களுக்கும், சுட்டிக்காட்டும் மனிதர்களுக்கும். . . இடையில் சிரித்து வாழ்ந்தாலே. . . அதுவே பெரும் சவால்.
7. பல வருடம் வாழும் மனிதன் அழுதுகொண்டே பிறக்கிறான். ஒருநாள் மட்டுமே வாழும் பூக்கள் சிரித்துக்கொண்டே பூக்கிறது. . . !
8. தனிமையை நினைத்து கவலை கொள்ளாதே. . .! தனிமை தான் உலகத்தையும், வாழ்க்கையையும் புரிய வைக்கிறது. . .!
9. எதைப்பற்றியும் யோசிக்காதவர்கள் சுலபமாக வாழ்ந்து விடுகிறார்கள். அதிகம் யோசிப்பவர்களுக்கே வாழ்க்கை கடினமானது.
10. நம் வாழ்க்கையில் எதுவுமே நிலையானது இல்லை. . . என்பதை உணர ஆரம்பித்து விட்டால், நமக்குள் இருக்கும் ஆணவம் காணாமல் போய் விடும். . .!
11. இழக்கும் வரை ஒருவரின் அருமை நமக்குள் புரிவது இல்லை.
கண்களில் முன் பூச்சிகள் பறப்பது போல் தென்பட்டால்... உடனடியாக வைத்தியரிடம் இல்லை கண் வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு விழிப்புணர்வு தகவலாக பதிவிடுகிறேன்.
ஆனால் இதை குணமாக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறி விட்டார்கள்.
No comments:
Post a Comment