Thursday, September 30, 2021

LOVE

 அன்பு பற்றிய தருணங்கள். . .

1. அன்புக்கு விலை என்றுமே அன்பாகத்தான் இருக்கிறது.  அதனால்தான்   அதை வாங்கவோ. . . விற்கவோ முடிவது இல்லை.

2. அருகதை இல்லாதவர்களுக்கு அன்பை கொடுத்தால், வாழ்க்கை விடை தெரியாத விடுகதை ஆகிவிடும்.

3. உண்மை இல்லாத அன்பும், உரிமை இல்லாத  உறவும்,  நேர்மை இல்லாத நட்பும்,  நம்பிக்கை இல்லாத  வாழ்க்கையும் என்றும் நிரந்தரம் இல்லை.

4. அழகிய முதல் கிடைத்த அதே அன்பு. . .  வாழ்நாள் முடியும் வரை கிடைக்கும் என்றால் அதன் பெயர் வாழ்க்கையல்ல . . . வரம்.

5. அதிகமான சில்லறை சேர்த்த உண்டியலும்,  அதிக அன்பை சேர்த்த இதயமும். நிச்சயம் ஒருநாள் உடைந்து போகும்…!

6.இந்த உலகத்தில் ரொம்ப மோசமான விடயம் -  நம் அன்பைப்பற்றி ஒரு நிமிடம் கூட நினைக்காதவர்களை நாம் நொடிக்கு நொடி நினைத்துக் கொண்டு இருப்பதுதான்…!

7. பிறரிடம் நாம் அன்பு காட்டுவது கூட சில நேரங்களில் நமக்கு பாடமாக அமைகிறது.  நாம் காட்டும் அன்பு நம்மை காயப் படுத்தும்போது…!

8. உன் கோபம் உன்னை நேசிப்பவர்களை யோசிக்க வைக்கும்.  உன் அன்பு உன்னை வெறுப்பவர்களையும் நேசிக்க வைக்கும்.

9. 

Wednesday, September 29, 2021

LIFE

 வாழ்க்கை பற்றிய தத்துவங்கள்

1. சரியோ தவறோ. . .  உன் வாழ்க்கை என்னும் புத்தகத்தை எழுதும் எழுதுகோல் உன் கையில் இருக்க வேண்டும்.  மற்றொருவர் கையில் கொடுத்தால்   கிறுக்கித் தள்ளி விடுவார்கள்…!

2. வாழ்க்கையில் எதுவுமே நிரந்தரம் இல்லை. . . என்பதை உணர்ந்தவன், துன்பத்தைக் கண்டு துவண்டு விடுவதும் இல்லை.  இன்பத்தைக் கண்டு துள்ளிக் குதிப்பதும் இல்லை.

3. எப்படி பேச வேண்டும் என்று கற்றுத்தர நிறை பேர் இருக்கிறார்கள்.  ஏன் பேசாமல் இருக்க வேண்டும் என்று கற்றுக்தர வாழ்க்கை மட்டுமே இருக்கின்றது.

4.நினைவுகள் தான் உண்மையான உயிர்.  நம் வாழ்வில் இழந்தவர்களை மீண்டும் உயிருடன் வாழ வைப்ப்து நினைவுகள் மட்டுமே. . .!  உறவுகள் விலகினாலும் நினைவுகள் பிரியாது. . .!

5. வாழ்க்கையில் அடிபட்ட பிறகுதான். . . சிலரது உண்மைதான முகத்தையும் தெரிய முடிகிறது.

6.குத்திக்காட்டும் மனிதர்களுக்கும்,  சுட்டிக்காட்டும்   மனிதர்களுக்கும். . . இடையில் சிரித்து வாழ்ந்தாலே. . .  அதுவே பெரும் சவால்.

7. பல வருடம் வாழும் மனிதன் அழுதுகொண்டே பிறக்கிறான்.  ஒருநாள் மட்டுமே வாழும் பூக்கள் சிரித்துக்கொண்டே பூக்கிறது. . . !

8. தனிமையை நினைத்து கவலை கொள்ளாதே. . .!  தனிமை தான் உலகத்தையும்,  வாழ்க்கையையும் புரிய வைக்கிறது. . .!

9. எதைப்பற்றியும் யோசிக்காதவர்கள் சுலபமாக வாழ்ந்து விடுகிறார்கள்.  அதிகம் யோசிப்பவர்களுக்கே வாழ்க்கை கடினமானது.

10. நம் வாழ்க்கையில்  எதுவுமே நிலையானது இல்லை. . . என்பதை உணர ஆரம்பித்து விட்டால், நமக்குள் இருக்கும் ஆணவம் காணாமல் போய் விடும். . .!

11. இழக்கும் வரை ஒருவரின் அருமை நமக்குள் புரிவது இல்லை.

கண்களில் முன் பூச்சிகள் பறப்பது போல் தென்பட்டால்... உடனடியாக வைத்தியரிடம் இல்லை கண் வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு விழிப்புணர்வு தகவலாக பதிவிடுகிறேன்.

அனுபவப் பகிர்வு மற்றோர்க்கும் பயன்படும் என்ற நோக்கில் எழுதுகிறேன்.
சென்றவருடம்  விடுமுறைக்கு சென்ற சமயம் கண்களில் பூச்சி பறப்பது போல் உணர்ந்தும்... இணையத்தில் இதை பற்றி தேடாமல் இருந்தது மிகப்பெரிய தவறு.
2 நாட்களின் பின்னர் வசிப்பிடம் வந்த போது  ஒர் கண்ணில் பார்வை இல்லாததை உணர்ந்து கண் வைத்தியசாலைக்கு சென்ற போது........
உடனடியாக  retinal detachment (netzhautablösung)என்று கூறி  ஆபரேஷன் செய்தார்கள்.  அதை Gas கொண்டெ ஒட்டினார்கள்.
3 வாரங்களின் பின்னர் பரிசோதனைக்காக சென்ற சமயம் அதே கண்ணில் நடு கருவிழியில் துவாரம் makuladegeneration இருப்பதாக கூறி 3 வாரங்களின் பின்னர் Gas கொண்டு ஒட்டி ஆபரேஷன்  செய்ய வேண்டும் என்றார்கள்.
அதற்குள்  ECG செய்யவும் சொன்னார்கள். அப்போது இதயத்தில் linksherz block என்று சொல்லி அதனால் பாதிப்பு இல்லை என்று சொன்னார்கள்.
3 வாரங்களின் பின்னர் கண் ஆபரேஷன் நடந்தது.
இன்று வரை அந்த கண்ணால் வாசிக்க பார்க்க முடிவது இல்லை. உருவம், நிறங்கள் தெரியும். வெளிச்சத்தை பார்க்க கண்கள் கூசுது.  கறுப்பு கண்ணாடியை அதிக நேரம் அணிய நன்றாய் இருக்கிறது.
ஏன் இப்படி நடந்தது என்று கேட்டதுக்கு.... சில சில நிகழ்வுகள் நடப்பதற்கு காரணங்கள் தெரிவது இல்லை என்று யாருக்கும் நடக்கலாம் என்றார்கள்.

ஆனால் இதை குணமாக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறி விட்டார்கள்.

Tuesday, September 28, 2021

வலி பற்றிய ரணங்கள். . .

 1. கண்ணீர் சிந்தும் கண்களைவிட அதை மறைத்து...       புன்னகை சிந்தும் இதழ்களுக்கே வலி அதிகம்..!

2. அடுத்தவர் வலி அறிந்து வாழ்கின்றவன் யாரையும் காயப்படுத்த மாட்டான்.   யாருடைய கண்ணீருக்கும் காரணமாக இருக்கவும் மாட்டான்.

3. யாரும் உங்களைப் பற்றி கணிக்க உரிமை கிடையாது.  ஏனெனில் அவர்களுக்கு உங்களைப் பற்றி வதந்திகள் மட்டுமே தெரிந்து இருக்கும்.  வலிகள் தெரியாது…!

4. உண்மையாக நேசிக்கும் நெஞ்சத்துக்குத்தான் புரியும். . .   பிரிவால் வரும் வலி என்று. . .!

5.  கோபம் எல்லோருக்கும் திமிராகத்தான் இருக்கும்.  ஆனால்… யாருக்கும் தெரிவது இல்லை அது வேதனையின் வெளிப்பாடு என்று…!

Monday, September 27, 2021

உறவு

 உறவு பற்றிய தத்துவங்கள்;-

1. எந்த உறவையும் பிடித்து  நிறுத்தாதே…!  யாரும் நிரந்தரம் இல்லாத  உலகில் எதற்காக உங்களை வருத்தி காயப்படுத்திக் கொள்கிறீர்கள்…!

2.  தேடித் போய் பேசினால் அவமானம் கிடைக்கும் என்ற ஒரே காரணத்தால் தான் தொலைந்து விடுகிறோம் பல உறவுகளை. . .!

3. தேவையற்ற பேச்சே உறவுகளை தொலைப்பதற்கு காரணம். பேச்சை அடக்கினால் உறவு நிலைக்கும்.

4. எந்த உறவாக இருந்தாலும் அதில் உண்மையான பாசம் இருந்தால் மட்டுமே, நீ விலகி நின்றாலும் அது உன்னை விரும்பிவரும்.

5. என்னதான் உரிமையோடு நினைத்துப் பழகினாலும்,  சில நேரங்களில் நான் யாரோ நீ யாரோ என்று உணர வைத்து விடுகிறார்கள் சில உறவுகள்…!

6. சிரிக்க வைத்த உறவுகள் சில நிமிடங்களில் நினைவில் இருக்கும்.  ஆனால் அழ வைத்த உ றவுகள் சாகும் வரை நினைவில் இருக்கும். . . !