தேவையான பொருட்கள்
50 கிராம் பட்டர்
1 முட்டை
50 கிராம் சீனி
10 கிராம் தேன்
1 தேக்கரண்டி எலுமிச்சை தோல்(grated)
50 கிராம் மா
1 டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
தடவுவதற்கு பட்டர்
1. பட்டரை உருக்கவும்.(அடுப்பில் அல்லது micro)
2. முட்டை, சீனி யை நன்றாக அடிக்கவும். தேன் சேர்த்து அடிக்கவும். எலுமிச்சை தோல் கலந்து கலக்கி விடவும்.
3 மா, பேக்கிங் பவுடர் கலந்து அரிக்கவும். அடித்த சீனி, முட்டை கலவையுடன் கலக்கவும். உருக்கிய பட்டரையும் அதனுடன் கலந்து அடிக்கவும்.
4.பொலிதீன் கொண்டு மூடி குளிர்சாதன பெட்டியில் 2-3 மணித்தியாலங்கள் வைக்கவும்.
5.மேடலின் பேக்கிங் தட்டில் பட்டர் தடவி, மா தூவி அடுப்பை சூடாக்கவும்.
6. மாவை எடுத்து ஒரு கரண்டியால் முக்கால் வாசி க்கு நிரப்பவும்.
7. 160 பாகை வெப்பநிலையில் 15-20 நிமிடங்களுக்கு பேக் செய்யவும்.

No comments:
Post a Comment