உடல் இதைப் தானாக உருவாக்க முடியாது, அதனால் உணவு அல்லது supplement மூலம் பெற வேண்டும்.
முக்கிய வகைகள்:
ALA (Alpha-linolenic acid) – தாவர உணவுகளில் (Flax seeds, Chia seeds, Walnuts)
EPA (Eicosapentaenoic acid) –இதய ஆரோக்கியத்திற்கு முக்கியம். மீன்களில்
DHA (Docosahexaenoic acid) – மூளை, கண்கள் மற்றும் நரம்பு மண்டலத்தின் வளர்ச்சிக்கு தேவை.
பயன்பாடுகள்:
இதய ஆரோக்கியம்: ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், டிரிகிளிசரைடு அளவைக் கட்டுப்படுத்த உதவும்.
மூளை & நினைவாற்றல்: மூளையின் வளர்ச்சிக்கும், நினைவாற்றலுக்கும் DHA அவசியம்.
கண் ஆரோக்கியம்: ரெட்டினா ஆரோக்கியத்துக்கு DHA முக்கியம்.
Inflammation குறைப்பு: மூட்டு வலி, ருமாட்டாய்டு ஆர்த்ரைடிஸ் போன்ற அழற்சி பிரச்சனைகளை குறைக்க உதவும்.
பாதுகாப்பு சக்தி: உடல் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும்.
தோல் ஆரோக்கியம்: உலர் தோல், சிரங்கு போன்றவற்றில் நன்மை.
எச்சரிக்கை (Precautions)
அதிக அளவில் எடுத்துக்கொண்டால், இரத்தம் தடிப்பதை குறைக்கும் (ரத்தம் உறைய தாமதமாகும்).
சிலருக்கு வயிற்றுப்போக்கு, தோல் சொறி போன்ற பக்க விளைவுகள் ஏற்படலாம்.
கடல் மீன் மூலம் ஓமேகா-3 பெறுபவர்கள், பாதரசம் (Mercury) போன்ற கன உலோகங்கள் கலந்திருக்கும் அபாயத்தை கருத்தில் கொள்ள வேண்டும். சால்மன், சார்டின்ஸ் போன்ற மீன்களில் இந்த அபாயம் குறைவு.
சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்கொள்ளும்போது, நாளொன்றுக்கு 250-500 mg EPA மற்றும் DHA இணைந்த அளவு பெரும்பாலான மக்களுக்கு போதுமானதாகும்.
சிறு கவனிப்பு:
ஆண்டு ஒருமுறை Triglyceride அளவையும் Vitamin D + Omega-3 அளவையும் பரிசோதித்துக் கொள்ளலாம்.

No comments:
Post a Comment