Wednesday, June 3, 2020

வெண்டைக்காய் பொறித்த கறி


தேவையான பொருட்கள்
வெண்டைக்காய் - 130 கிராம்
வெங்காயம் -1
பச்சை மிளகாய் -1-2
உள்ளி - 4
தக்காளி - 1
மிளகாய் தூள் -1 1/2 தேக்கரண்டி
வெந்தயம் - 3/4 தேக்கரண்டி
பால் 1 மேசைக்கரண்டி(பசு பால் அல்லது தேங்காய்பால்
உப்பு தேவையான அளவு
எண்ணெய் தேவையான அளவு
புளி சிறிதளவு
மா சிறிதளவு 1/4 தேக்கரண்டி

செய்முறை -
அடுப்பில் சட்டியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெண்டிகாயை மெலிதாக பொறித்து எடுக்கவும்.
அடுப்பில் சட்டியை வைத்து சூடு வந்தவுடன் வெங்காயம், மிளகாய், உள்ளி போட்டு வதக்கவும்.

சிறிது நேரத்தின் பின்பு வெந்தயம் போட்டு கிளறவும். (வெந்தயம் கறுத்தால் கறி கசந்து விடும்)
வெந்தயம் சிறிது சிவந்த உடன் தக்காளி, மா, மிளகாய் தூள் சேர்க்கவும்.

எல்லாவற்றையும் கலந்து பேஸ்ட் ஆக கிளறவும்.

பொறித்த வெண்டைக்காயை யும் சேர்த்து கிளறி, புளி கரைசலையும் அதனுடன் ஊற்றி கொதிக்கவிடவும்.

நன்றாக ஒன்றுடன் கலந்து வரும்போது பால் விட்டு இறக்கி விடவும்.

வெண்டைக்காய் கறி தயாராகி விட்டது.




Sunday, May 17, 2020

MADELEINE


தேவையான பொருட்கள்
50 கிராம் பட்டர்
1 முட்டை
50 கிராம்  சீனி
10 கிராம் தேன்
1 தேக்கரண்டி  எலுமிச்சை தோல்(grated)
50 கிராம் மா
1 டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
தடவுவதற்கு பட்டர்
1. பட்டரை உருக்கவும்.(அடுப்பில் அல்லது micro)
2. முட்டை, சீனி யை நன்றாக அடிக்கவும். தேன் சேர்த்து அடிக்கவும். எலுமிச்சை தோல் கலந்து கலக்கி விடவும்.
3 மா, பேக்கிங் பவுடர் கலந்து அரிக்கவும்.  அடித்த சீனி, முட்டை கலவையுடன் கலக்கவும்.  உருக்கிய பட்டரையும் அதனுடன் கலந்து  அடிக்கவும்.
4.பொலிதீன் கொண்டு மூடி குளிர்சாதன பெட்டியில் 2-3 மணித்தியாலங்கள் வைக்கவும்.
5.மேடலின் பேக்கிங் தட்டில் பட்டர் தடவி, மா தூவி  அடுப்பை சூடாக்கவும்.
6. மாவை எடுத்து ஒரு கரண்டியால் முக்கால் வாசி க்கு நிரப்பவும்.
7.  160 பாகை வெப்பநிலையில் 15-20 நிமிடங்களுக்கு பேக் செய்யவும்.